'அய்யய்யோ' என்று பதறினாள் லதா.
'ஹேய் என்ன ஆச்சு, இருட்டிலே ஏதாவது தப்பு பண்ணிட்டேனா' என்று கண்ணடித்தான் கிரி.
'அடச்சே, விவஸ்தயே இல்லடா உனக்கு. அப்படியெல்லாம் நீ ஏதாவது பண்ண, நான் இனிமே உன் கூட எங்கேயும் வர மாட்டேன்' என்றாள் லதா.
'சரி சரி, கோவப்படாதீங்க மாடம், என்ன ஆச்சு' என்றான் கிரி.
'ம்ம்ம்.. இந்த படத்த பார்க்க எங்க அப்பா வந்து இருக்கார், இப்போ தான் கவனிச்சேன்' என்றாள் லதா.
இப்போது கிரியையும் பதட்டம் தொற்றி கொண்டது.
இதிலெயே புரிந்து இருக்குமே, லதாவும் கிரியும் காதலர்கள் என்று??? அதே... வெகு நாட்கள் கழித்து அவர்கள் ஒரு படம் பார்க்க வந்து இருக்கிறார்கள். அதில் இப்படி ஒரு சிக்கல்.
'அவர் உன்னை பாத்துட்டாரா?' என்று கேட்டான் கிரி.
'பாத்துட்ட மாதிரி தான் இருக்கு' - லதா. 'சரி வா..எப்படியும் படம் முடிய போகுது. நாம இப்பொவே கிளம்பிடுவோம்' என்று கிளம்பினார்கள். ஆனால், அவர்களின் போதாத நேரம், அவர்கள் வண்டி எங்கோ முன்னால் இருந்தது. பின்னாடி நிற்கும் வண்டி எடுத்தால் தான் இவர்களால் வண்டி எடுக்க முடியும். கையை பிசைந்து கொண்டு இருந்தனர் இருவரும். அதற்குள் படம் விட்டு அனைவரும் வந்தனர். லதாவின் அப்பாவும் வந்தார். கிட்ட தட்ட இவர்கள் நிருத்தி இருக்கும் வண்டியின் அருகில் அவர் வண்டியும் இருந்தது. 'போச்சு.. இன்னிக்கு சத்தியமா மாட்டினோம்' என புலம்ப ஆரம்பித்தாள்.
வண்டியில் இருவரும் மௌனமாக வந்தனர். வீட்டினருகில் இறங்கியதும் பார்த்தால், அப்பா அவர்களுக்கு முன்னலேயே வீடு வந்து சேர்ந்தார். உடனே கிரி சொன்னான் - 'லதா, பயப்படாதே. ரொம்ப ப்ராப்ளம் ஆச்சுனா, விஷயத்த சொல்லிடு. நான் இங்கயே இருக்கேன். கொஞ்ச நேரம் நிக்கறேன். எந்த ப்ராப்ளமுமில்லனா, மாடிக்கு வந்து டாடா சொல்லு, நான் நிம்மதியா வீட்டுக்கு போறேன். ஆல் த பெஸ்ட்'
லதாவும் கடவுளை வேண்டியபடியே வீட்டினுள் சென்றாள். ஆனால், அங்கே அவள் அப்பா அம்மாவிடம் சகஜமாக பேசி கொண்டு இருந்தார். சினிமா போய் வந்த கதையையும் சொல்லி கொண்டு இருந்தார். ஆனால், லதாவை பார்த்த மாதிரியே தெரியவில்லை. லதா வந்ததை கவனித்தும் ஒன்றும் பெரிதாக முகம் மாறவில்லை. நிம்மதி ஆனாள் லதா. சந்தேஷமாய் குதித்தவாரே மாடிக்கு சென்று கிரியை பார்த்து கை அசைத்தாள். கிரியும் நிம்மதி அடைந்தான்.
அப்போது திடீரென மாடிக்கு வந்த லதாவின் அப்பா, மகள் எவனையோ பார்த்து கை அசைத்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தார். வேகமாய் போய், லதாவின் கன்னத்தில் 'பள்ள்ள்ளார்...'