அவர் ஒரு தேர்ந்த கை ஜோதிடர். பலரும் அவரிடம் கை ஜோசியம் பார்த்து பயனடைந்துள்ளனர். ஆனால் அவர் அதை ஒரு பொழுது போக்காக தான் செய்கிறார். யாருடைய கையையாவது பார்த்து விட்டால் அவருக்கு 'குறு குறு' என்றாகி விடும். உடனே ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவார். எங்காவது கூட்டம் கூடி இருந்தால் அவர் பாடு கொண்டாட்டம் தான். மற்றவர்களின் கைகளை பார்த்து கொண்டே நேரத்தை போக்கி விடுவார். ஆனால் அவருடைய கை பற்றி யாரிடமும் எதுவும் சொன்னதில்லை.
அன்றும் அப்படி தான். ஒரு அவசர வேலையாக பஸ்ஸில் ஏறினார். கூட்டம் அவ்வளவாக இல்லை. அவருக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்தது. அவர் அருகில் ஒரு பெரியவர் வந்து அமர்ந்தார். நம்மவர் வழக்கம் போல அவருடைய கை ரேகையை ஆராய்ச்சி செய்ய ஆரம்ப்பித்தார். ஆனால் அதிக நேரம் அந்த பெரியவர் இருக்கவில்லை. அடுத்த நிருத்தத்திலேயே இறங்கி விட்டார். 'அட சே' என்றாகி விட்டது நம்மவருக்கு. 'ம்ம்.. அடுத்து ஒருவன் வராமலா போய் விடுவான்' என்று சமாதானம் அடைந்தார். ஒரு இளைஞன் வந்தான். நம்மவர் அவர் கையை பார்க்க ஆரம்பித்தார். 'ம்ம்.. பரவாயில்லை.. இந்த பையனின் கை நன்றாகவே இருக்கிறது' என்று எண்ணினார். பார்த்து கொண்டே இருந்தவர் திகைத்தார். 'அடடா.. இவன் ஆயுள் மிக குறைவாக உள்ளதே.. இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் உயிரோடு இருந்தால் பெரிது. இதை இவனிடம் சொல்லி எச்சரிக்கை செய்யலாமா, அல்லது..' என்று யோசித்து கொண்டே இருந்தார்.
சிறிது நேரம் யோசித்த பின் 'சொல்லி விடுவது' என தீர்மானித்து, அவன் பக்கம் திரும்ப எத்தனித்தார். அப்போது எங்கிருந்தோ ஒரு லாரி வெகு வேகமாக அந்த பஸ்ஸை நோக்கி வந்தது. ஓட்டுநர் அதை தவிர்க்கும் விதமாக பஸ்ஸை ஒடித்தார். லாரி ஜோதிடர் இருந்த இருக்கையை உரசியது. அதிர்ச்சியில் 'ஹார்ட் அட்டாக்' வந்து பரிதாபமாக உயிர் இழந்தார் ஜோதிடர். அவர் அருகில் இருந்தவன், வண்டியை ஆஸ்ப்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கெஞ்சி கொண்டு இருந்தான்.
1 Comments:
thanks for taking pain and visiting my other blog also. and thanks for the appreciation.
Post a Comment
<< Home